செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

Published on

spot_img
spot_img

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ – பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி ஒன்று தரையிறங்கியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் குறித்த உலங்கு வானூர்த்தி வந்ததாக பிரதேசவாசிகள் சந்தேகித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொக்காவெவ பொலிஸாரிடம் வினவிய போது, ​​குறித்த குழுவினர், புற்று நோயாளர் ஒருவருக்காக பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி நேற்று காலை வாகனம் மூலம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நோயாளியை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்த்தியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றே அந்த உலங்கு வானூர்த்தியில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest articles

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் அனுப்புமாறு உத்தரவு ……

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும்...

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி….

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை …..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன்...

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி ……

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த...

More like this