செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

Published on

spot_img
spot_img

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரம்பனாவ –  ஒருதொட்ட வீதியின் செரவத்த சந்தியில்  லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி மீது மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியில் பயணித்த 11 பேரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முச்க்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் கோகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய மஹியாவ, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கோகலைபொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest articles

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனானது …..

திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ்...

வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் ……

அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக...

மாரடைப்பு காரணமாக தெல்லிப்பளை மகாஜன பெண் உப அதிபர் மரணம் …….

மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு...

More like this