செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketகுஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது...

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Published on

spot_img
spot_img

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீல்டிங்கில் சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயே கேட்சை தீபக் சாஹர் தவற விட்டார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார். இந்த சூழலில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லின் அதிரடிக்கு தடை போட்டார். இதன்படி 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்த ஜோடியில் சஹா 54 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். முடிவில் ஹர்திக் பாண்ட்யா 21 (12) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரானா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 3 பந்துகள் வீசப்பட்டநிலையில் தீடீரென போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மழை நின்றவுடன் மைதானத்தில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி, மைதானத்தை தயார் படுத்தினர். இதனையடுத்து போட்டி மீண்டும் 12.10 மணிக்கு தொடங்கியது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த சூழலில் இந்த ஜோடியில் கெய்க்வாட் 26 (16) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கான்வே 47 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானே 27 (13) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சிவம் துபேவுடன், அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். அதிரடி காட்டிய இந்த ஜோடியில் அம்பத்தி ராயுடு 19 (8) ரன்களில் கேட்ச் ஆக, அடுத்து களமிறங்கிய தோனி (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். முடிவில் சிவம் துபே 32 (21) ரன்களும், அதிரடி காட்டிய ஜடேஜா 15 (6) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 15 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொகித் சர்மா 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.

Latest articles

How to connect with lesbian older women

How to connect with lesbian older womenIf you're interested in connecting with lesbian older...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை...

லக்னோவிடம் சரணடைந்த சென்னை அணி …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 34 வது போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள்...

பிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ……

பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்...

More like this

How to connect with lesbian older women

How to connect with lesbian older womenIf you're interested in connecting with lesbian older...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை...

லக்னோவிடம் சரணடைந்த சென்னை அணி …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 34 வது போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள்...