செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

Published on

spot_img
spot_img

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில் சேவை ஆரம்பமாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான கோர விபத்தில் 17 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.

கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 ற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  விபத்து இடம்பெற்ற இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள்  தீவிரமாக நடந்து வந்த நிலையில் 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்தும்  அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.

இவ்வாறான சூழலில்,  ஒடிசா ரயில் விபத்து சம்பவித்து  51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில் சேவைகள்  தொடங்கியுள்ளன.

மேலும், சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

அமெரிக்க நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது……

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா...

கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்……

சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20)...

வெங்காய இறக்குமதிக்கான இறுதித் தீர்மானம்……

இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்…..

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி...

More like this