செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஎன்னால் தூங்க முடியவில்லை, இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா கவலை

என்னால் தூங்க முடியவில்லை, இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா கவலை

Published on

spot_img
spot_img

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட ெடன்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பை வென்று சாதித்தது. இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வரை வைரலானது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகுந்த வேதனையடைந்ததாக கூறினார்.

இது குறித்து மோகித் சர்மா கூறியதாவது:- நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன். வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன். என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க. ஆனால் அதில் எந்த அர்த்தமுமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன். என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன். இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்.

Latest articles

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்….

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது...

வெளியிடப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு வர்த்தமானி….

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ்...

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு…..

இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தடையுத்தரவு நீடிப்பு……

இன்று (18) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத்...

More like this

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்….

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது...

வெளியிடப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு வர்த்தமானி….

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ்...

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு…..

இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில்...