செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

Published on

spot_img
spot_img

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஸ்பா மேடம்’ என அழைக்கப்படும் இந்த பெண் எல்ல பிரதேசத்தில் இருந்து தனது 17வது வயதில் கொழும்புக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

28 வயதான இந்த பெண் தற்போது பத்தரமுல்லை மற்றும் தலங்கம பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 04 தவறான விடுதிகளை நடத்தி வருவதாக மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை முப்பாலம் சந்திக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த இந்த தகாத தொழிலை நடத்தும் விடுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.விடுதியின் தினசரி வருமானம் 282,000 ரூபா என்று மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பணத்தை கைப்பற்றிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். இந்த பெண் ராஜகிரியில் உள்ள விசாலமான வீட்டில் வசிப்பதாகவும் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest articles

கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்……

சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20)...

வெங்காய இறக்குமதிக்கான இறுதித் தீர்மானம்……

இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்…..

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி...

முதலைக்கு இரையாகிய முதியவர் வாழைச் சேனையில் துயரம் …….

முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

More like this