செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் ரயில் தடம்புரண்டு கோர விபத்து: 207 பேர் உயிரிழப்பு! 900 பேர் படுகாயம்

இந்தியாவில் ரயில் தடம்புரண்டு கோர விபத்து: 207 பேர் உயிரிழப்பு! 900 பேர் படுகாயம்

Published on

spot_img
spot_img

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு “எல்லா உதவிகளும்” வழங்கப்பட்டு வருவதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் ஒரு “கடுமையான விபத்து” என்று மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளர் எச் கே திவேதி செய்தியாளர்களிடம் கூறினார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவேக புகையிரதம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற புகையிரதம் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Latest articles

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்….

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது...

வெளியிடப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு வர்த்தமானி….

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ்...

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு…..

இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தடையுத்தரவு நீடிப்பு……

இன்று (18) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத்...

More like this