செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Published on

spot_img
spot_img

புதுடெல்லி, சமீப காலமாக இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இளம் வயதினரையும் இது விட்டுவைக்கவில்லை. நிகழ்ச்சிகளில் நடனமாடிக்கொண்டிருந்தவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும், இதில் 30-60 வயது நபர்களின் இறப்பு 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 15 வருடங்களில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புகையிலை பயன்பாடு காரணமாக 32.8 சதவீதம் பேருக்கும், மதுபான பயன்பாட்டின் காரணமாக 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41 சதவீதம் பேருக்கும், பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4 சதவீதம் பேரும் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை – இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.

Latest articles

கோழி இறைச்சியின் திடீர் விலை குறைப்பு …….

பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களின்...

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் காலமானார் ………

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல்...

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…….

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று...

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும்……

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவ்வாறு ஆதரவு வழங்கப்படுமாயின் ஜனாதிபதி...

More like this