ஹோர்டன் சமவெளிக்குச் செல்வதற்காக குடும்பம் ஒன்று பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக ஹோர்டன் சமவெளி பகுதிக்கான வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட பேரூந்து ஒன்று நேற்று (ஏப்ரல் 29) மாலை நுவரெலியா நோக்கிச் சென்ற போது விபத்துக்குள்ளானது.
ஹோர்டன் சமவெளிக்குச் சென்றுவிட்டு நுவரெலியாவுக்குத் திரும்பும் வழியில் செங்குத்தான சரிவில் இயங்கிக்கொண்டிருந்த பஸ்ஸின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள மலை முகட்டில் மோதியதில் பஸ் பிரதான வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் கவிழ்ந்த பேருந்து அகற்றப்பட்டு வருவதாகவும், பேருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹோர்டன் சமவெளிக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனவும் ஐ.பி.ஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.