சில்லறை விற்பனைக்காக நீர்கொழும்பிலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட கெரோயின் போதைப் பொருட்கள் 56 வயதுடைய நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.இச்சம்பவம் செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தினமன்று மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் – அடம்பன் வீதியில் வைத்து ஒரு நபரை பொலிசார் வீதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 30 கிராம் கெரொயின் போதை பொருள கைப்பற்றப்பட்டது.
மாவட்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்ச்சகர் சந்திரபாலவின் பணிப்பில் உதவிபொலிஸ் அத்தியட்ச்சகர் பொலிஸ் அதிகாரி கேரத் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி .ரத்நாயகவின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் 36501 ரத்னமணல தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவ் சந்தேக நபரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.