நேற்று (2) பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று வெவ்வேறு சோதனைகளின் போது 16 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கல்கிசையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 30 வயது, 40 வயது மற்றும் 68 வயதுடைய மவுண்ட் மற்றும் இரத்மலானையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை, 20 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும், 10 கிராம் ஹெரோயினுடன் 22 வயதான ஒருவரும் 58 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.