மாளிகாவத்தை, கல்கிசை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 22 கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை, கல்கிசை மற்றும் கடவத்தை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 40, 45, 31 மற்றும் 38 வயதுடைய மாளிகாவத்தை, கொழும்பு 14, மடபாத மற்றும் ரன்முத்துகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.அவர்கள் இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.