மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகிய பல சொத்து திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று நபர்கள் 130 மில்லிகிராம் ஹெரோயினுடன் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (3) ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் பல சந்தர்ப்பங்களில் வீடுகளுக்குள் புகுந்து பணம் மற்றும் தங்கப் பொருட்கள் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மொரட்டுவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயது, 26 வயது மற்றும் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட சொத்துக்களில் பாதி கிராண்ட்பாஸில் அமைந்துள்ள ஒரு கடைக்கு விற்கப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் மேலும் பல வழக்குகள் தற்போது நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று (4) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.