நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இப்போது அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
அபர்ணா தாஸின் காதலர் தீபக் பரம்போல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நாளை இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.