“ஸ்வர்ணமஹால் பைனான்சியல் சர்வீசஸ் பிஎல்சி” இன் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், “ஸ்வர்ணமஹால் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிஎல்சி” நிறுவனத்திற்கு பண வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “ஸ்வர்ணமஹால் பைனான்சியல் சர்வீசஸ் பிஎல்சி” 28 டிசம்பர் 2022 முதல் நிதி வணிகச் சட்டத்தின் விதிகளின் கீழ் நிதி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.