ஆங்கில வார்த்தைக்கு 5 வயது சிறுமி தவறாக ஸ்பெல்லிங் கூறியதால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவியின் கையை உடைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையில் 4 இடங்களுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்ட அந்த மாணவி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கை பழைய நிலைக்கு வர ஒரு வருடத்தை தாண்டிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறுமியின் கையை உடைத்துவிட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், மாணவி மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.