காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.இவர் காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, இவர் சிறைச்சாலை அதிகாரியிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளதுடன், கழிவறைக்குச் செல்வதற்காக கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரி பாதுகாப்புக்காக கழிவறைக்கு முன்பாக காத்திருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.