[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைவேலை நேரம் தொடர்பில் ஏற்படவுள்ள சிக்கல்!

வேலை நேரம் தொடர்பில் ஏற்படவுள்ள சிக்கல்!

Published on

spot_img
spot_img

நாட்டில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.சாதாரண தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் புரியும் இடங்களில் சேவையாற்றுவதற்காக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமை, தேவையான நேரத்தில் அவர்களை வெளியேற்ற இருக்கும் உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை உருவாக்கும் நிலைமையே இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரியும் தொழிற்சாலைகளின் பிரதானிகளினால், தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள கூடியவாறான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் கட்டாயம் கையொப்பமிடவேண்டி ஏற்படும். அதில் கையொப்பமிட்டதன் பின்னர் சாதாரண தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்காது.

எனவே, அதனூடாக தொழிலாளர்களை அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு ஏற்றவாறு தொழில்புரியும் காலத்தை தீர்மானிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பல்வேறு போராட்டங்களின் பின்னரே தற்போது நடைமுறையில் இருக்கும் 8 மணித்தியால பணியை பெற்றுக் கொண்டோம்.

இவ்வாறு இருக்கையில், தேவை ஏற்படும் பட்சத்தில் 12 மணித்தியாலம் சேவையாற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. இந்த யோசனைகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

Latest articles

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...

பிக்கு தாக்கியதில் உயிரிழந்த முதியவர்…..

கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து...

More like this

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...