வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் ஆனைகுளத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு வழிபடுவது போல் வந்த நபர் ஒருவர் அம்மன் சிலையிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.
இங்குள்ள தந்திரம் என்னவெனில், கோவிலுக்கு வந்தவுடன் சாமி கும்பிட்டு, அங்குள்ள 2 வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்து உண்டர் பின் சட்டென்று எழுந்து சாமி கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்களைக் கழற்றிவிட்டு பின் அமர்ந்து நெற்றியில் விபூதி பூசிக்கொள்கிறார்..
மீதியுள்ள ஒரு வாழைப்பழத்தை உண்டு கைகளால் வணங்குகிறார். அதற்கு பின் தான் அணிந்திருந்த மாலையைக் கழற்றி அங்கிருந்த தட்டில் வைத்துவிட்டு மீண்டும் கையைப் பிடித்து கும்பிட்டார். எழுந்து யாராவது தன்னை பார்க்கிறார்களா என சுற்றிப் பார்க்கிறார் பின் அவர் வெளியே செல்லும் காட்சிகள் அனைத்தும் சிசிடியில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.