குருநாகல் – புத்தளம் வீதியின் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்ததாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரும் காரில் பயணித்த தம்பதிகளுமாக, எட்டுப் பேர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.