2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு இணைந்து கொள்வதற்கு யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி மற்றும் ஏனைய பொருளாதார வசதிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக (https://www.facebook.com/JaffnaHinducollegeOfficial?mibextid=ZbWKwL) விண்ணப்பங்களுக்கான இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
டிசம்பர் 08ம் திகதி விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டிய இறுதித் திகதியாகும். மேலதிக தொடர்புகளுக்கு 021-222-2431 மற்றும் 070 211 1764 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.