நெதர்லாந்தில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்களின் ஊடாக நெதர்லாந்தில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி இடம்பெற்றுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்களது போலி கையொப்பங்களுடன், போலி கடிதத் தலைப்பின் கீழ் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடமிருந்து மக்கள் அவதானத்துடன் இருக்க கோரப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சால் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாகவே தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அமைச்சின் செயலாளர்கள் கையொப்பமிட்டு ஆவணங்கள் எதனையும் வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.