2022 ஜனவரியில் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு (178.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு இலங்கையின் மீட்சிக்கான பாதையில் ‘நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்தார்.