சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது என்றும் இதுபற்றி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிலுக்காக செல்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்ததன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது கட்டாயமானதாகும்.
ஓமானில் தொழிலுக்காக சென்று மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட ஒருவர் ஏழு இலட்சம் ரூபா செலவில் சுற்றுலா விசாவில் அங்கு சென்றிருந்தமையும் தெரிய வந்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.