ஜனவரி 07ஆம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் எடிசன் திரை விருது நிகழ்வில் உலக தமிழர்கள் கடந்த ஒரு மாதமாக வாக்களித்து வருகின்றனர்.
அவ்வாக்களிப்பில் கமலஹாசனின் விக்ரம், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் இவ்விரு படங்களும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன. கமலஹாசனின் திரை வாழ்க்கையில் அதிகப்படியான வசூலை ஈட்டிய படம் மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழனின் பெருமைகளை உலகிற்கு எடுத்து சொல்ல வாய்ப்பை பயன்படுத்தி எடுத்த மணிரத்தினத்திற்கு மகுடமாய் அமைந்த பொன்னியின் செல்வன் திரை கலைஞர்கள் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் முக்கியமாக விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களை உலக தமிழர்கள் வாக்களித்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் மலேசியா தீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.