வெலிகம கலகந்த கொலந்தந்த பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் வீதியில் சென்று கொண்டிருந்தபோது பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதனைடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெண் கொடுத்த தகவலின் பேரில் அவரது இரண்டு மகன்கள் உட்பட சிலர் வந்து அந்த இளைஞனை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அவரது இரண்டு மகன்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.