பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான அபிமன்சலஸ் போர் வீரர்களின் சம்பளத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் திரு.விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக திரு.வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, வரிவிதிப்பு முறைமைகளை அமைப்பதில் பொதுவாக சில தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அது தொடர்பான விடயம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.