மும்பையில் வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை, தம்பதி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த நபர் தானேவின் நயா நகரைச் சேர்ந்த அப்சர் காத்ரி (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தம்பதிக்கும் ஒருவருக்கொருவர் வீட்டின் வாசலருகே செருப்பை வைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இது தொடர்பான வாக்குவாதம் அவர்களிடையே கைகலப்பாக மாறியது. இந்த சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அப்சர் காத்ரி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தம்பதி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.