போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தலா 3,600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் வீட்டுப் பாவனைக்கான எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
எனினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனமொன்றின் பேச்சாளரொருவர் கூறுகையில்,
நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளன.