பொதுவாக அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் சிறுவியதி வந்தால் கூட கைவைத்தியங்களைக் கொண்டு தான் சரி செய்தனர்.
அந்தவகையில் நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும். இவ்வாறு குடிக்க பிடிக்காதவர்களுக்கு துளசி இலையை மட்டும் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.
கால் தேக்கரண்டி மிளகுத் தூள், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3-4 மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடையை மிக எளிதில் குறைத்துவிட முடியும்.
ஒரு கையளவு கருவேப்பிலையைத் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். அடர்த்தியாக காணப்படும், முடி உதிர்வதை தடுத்து, முடி நன்கு வளர வழிவகுக்கிறது.
கடுமையான இருமல் பிரச்சனையில் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் மூன்று கப் தண்ணீரில் மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மூன்று வேளை குடித்து வந்தால் கடுமையான இருமல் குணமாகும். இந்த தண்ணீரை குழந்தைகளும் கூட குடிக்கலாம்.
பல் வலி உள்ளவர்கள் சிறிதளவு துளசி இலை, மிளகு, கொஞ்சம் உப்பு இவற்றை அனைத்தையும் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் பல் வலி குணமாகும்.
குளிக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை போட்டு குளித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.