அனுராதபுரத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுடைய தாயாரும் அவரது 10 மற்றும் 05 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.
இதேவேளை, 37 வயதான தந்தை தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் எலயபத்துவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.