எலஹெர சருபிம கிராமத்தில் இந்த நாட்களில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் உறங்கும் அறைகளின் ஜன்னல்களில் இருந்து படம் எடுப்பதால் பெண்கள் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீடு ஒன்றிற்குள் நுழைந்து பெண் ஒருவரை புகைப்படம் எடுத்த போது, உரிமையாளரும் கிராம மக்களும் அவரை பிடிக்க முயற்சித்தும் தோல்வியடைந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் அதிக பிரச்சினை மற்றும் அதிக மின் கட்டணம் காரணமாக மின் விசிறிகளை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துள்ள அறைகளில் பெண்கள் உறங்குவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நபர் புகைப்படம் எடுப்பதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னரும் இக்கிராமத்தில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடன், இளம்பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் புகுந்து சுமார் 50000 ரூபா பெறுமதியான தொலைபேசியை திருடிச் சென்றதுடன், இது தொடர்பில் பக்கமூன பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரால் இதுவரை அந்த நபரை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.