நெற் பயிற் செய்கை உரத்துக்கான நிதி ஒதுக்கீடு….
2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போகத்திற்குத் தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதற்கமைய, அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 10 பில்லியன் ரூபாயில், 5 பில்லியன் ரூபாவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் மீதமுள்ள 5 மில்லியன் ரூபாவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளும் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பபிடவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.