விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான 4 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன. அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா உள்ளிட்ட 15 பேர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு மாநிலங்களில் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜோபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்; விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் அன்பு ஜோதி’ ஆசிரமத்தில் இருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 பேர் ஆசிரமத்தில் காணாமல் போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கல்கத்தாவைச் சேர்ந்த ரிபானா (30) தன்னை ஆசிரமத்தில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, வன்புணர்ச்சியுடன் நடத்தப்பட்ட வன்புணர்ச்சி செய்ததாகப் புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமியம்மாள் (80) மற்றும் முத்துவிநாயகம் (48) ஆகியோர் இதே ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாகப் பெறப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு,
அதேபோல, அனுமதி பெறாமல் ஜீபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியா விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார்சாவடி என்ற இடத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆசிரமம் நடத்தி வழக்கு தொடரப்பட்டது ஆகிய நான்கு வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.