மானிப்பாய் பரிஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் பாலகிருஸ்ணன் வெற்றிக்கிண்ணத்திற்கான விலகல் முறையிலான T- 20 சுற்று போட்டியின் காலிறுதியில் யூனியன் விளையாட்டு கழகத்தையும் அரையிறுதியில் சென்ரலைட்ஸ் விளையாட்டு கழகத்தையும் வெற்றி கண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது kccc.
அரையிறுதி போட்டி இன்று 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் எமது KCCC விளையாட்டுக் கழகம் சென்ரலயிட்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்ரலயிட்ஸ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய kccc 20 பந்து பரிமாற்ற நிறைவில் 9 இலக்குகளை இழந்து 82 ஓட்டங்களை பெற்றது.
அதில் kccc சார்பாக
சாம்பவன் -27
ஜனுதாஸ்-22
துவாரகன்-08
ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் சென்ரலயிட்ஸ் சார்பாக
இந்துயன்-03
ஜெரிக்-03
டார்வின்-02
கயன்-01
இலக்குகளை கைப்பற்றினர்.
83 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்ரலயிட்ஸ் விளையாட்டுக் கழகம் 18.5 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றது.
இதில் சென்ரலயிட்ஸ் அணி சார்பாக
சாரங்கன்-19
கௌதமன் -19
டார்வின்-10
ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் KCCC அணி சார்பாக
நிமலதாஸ்-03(Hatrick உள்ளடங்களாக)
துசியந்தன்-02.