வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 37 க்கும் மேற்பட்டவர்கள் காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 150 குடியிருப்பாளர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.வியட்நாமில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.