திருச்சியில் விமான நிலையத்தில் விமான கதவு திறக்காததால், 1.30 மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு 10.10 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன் வந்தது.
அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை மணி நேரம் பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவித்தனர். தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்து கதவை திறந்தனர். இதையடுத்து இரவு 11.30 மணியளவில் பயணிகள் கீழே இறங்கினர்