இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரே இவாறான விபரீத முடிவினை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் பனாகொடை இராணுவ முகாமின் பீரங்கிப்படையணி சிப்பாய்களின் விடுதி அருகே இடம்பெற்றுள்ளது.மாத்தளை, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத, 28 வயதுடைய இந்திக சதுரங்க அத்தநாயக்க எனும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனம் காணப்பட்டுள்ளது.