சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த மூவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி யாத்திரைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சுயநினைவு இன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சுயநினைவு வந்த பின்னர் தனது காதலியை தேடி உள்ளார்.
மருத்துவ மனையில் உள்ள தாதி ஒருவருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி நான் எனது காதலியுடன் பயணத்தை முடித்துக் கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றது அவர் சோர்வாக உள்ளதாக கூறி எனது மடியில் தலை வைத்து தூங்கினார்.
பின்னர் தான் விபத்து ஏற்பட்டது விபத்திற்கு பின்னர் சுய நினைவை நான் இழந்து விட்டேன் என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றது மட்டுமே நினைவில் உள்ளது எனது காதலி எங்கே என்ன நடந்தது என கூறுங்கள் எனது காதலியை கண்டு பிடித்து தாருங்கள் என தாதியிடம் இளைஞன் கேட்டுள்ளார் அவர் கூறிய தகவலுக்கு அமைய தாதி தேடி பார்த்து வேளை உயிரிழந்த இரு பெண்களில் ஒரு பெண் அந்த இளைஞனின் காதலி என தெரிய வந்தது.
இதனை அறிந்ததும் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது இதனை நான் எவ்வாறு கூறுவேன் காதலி இறந்து விட்டார் என மிகுந்த வேதனையுடன் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.