விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக 4 பைட்டர் ஜெட் இயக்கும் விமானப்படை வீரர்கள் தயாராகி வருவதாக தாம்பரம் விமான படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை மற்றும் பயிற்சி மையத்தில் விமானப்படை பயிற்சி மையம் வழங்கப்படும் பயிற்சிகள், சேவை, பேரிடர் காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது இங்கு பயிற்சி பெரும் வீரர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேம் எம்.கே1, பி.சி 7, எம்.கே2 பயிற்சி விமானங்களிலும், சீட்டக், மைக்ரோ லைட் ஆகிய 2 வகை எலிகாப்டர்களிலும் பயிற்சியளிக்கப்படுவதாக கூறினர்.
தாம்பரம் விமானப்படையில் இரண்டு விமான ஓடுதளங்கள் உள்ள நிலையில் மாடம்பாக்கம் பகுதியில் கூடுதலாக ஆயிரம் அடி விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தாம்பரம் விமானப்படை தளபதி தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்தால் பைட்டர் ஜெட்களை இறக்கவும், ஏற்றவும் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.