டிஸ்கோ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (ஜனவரி 29) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 14 கிராம் ஹெரோயின் மற்றும் நான்கு கூரிய ஆயுதங்களை வைத்திருந்த போது, விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது பிரான்ஸில் வசிக்கும் பிரபல பாதாள உலக மன்னன் ‘ரூபென்’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உட்பட ‘ரூபெனால்’ நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு உதவியவர் என நம்பப்படுகிறது.