பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று, அதிவேகமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விசாகப்பட்டினம், சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்தது. அப்போது ஆட்டவுக்குள் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் தூக்கி விசாப்பட்டனர்.
அதில் சில மாணவர்களின் தலை சாலையில் பயங்கரமாக மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 8 மாணவர்களில், 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.