மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாய் அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (7) இரவு 10:00 மணி முதல் ஞாயிறு (8) மாலை 4:00 மணி வரை.
கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.