எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாண ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் எனவும், அதன்படி புதிய இலக்கத் தகடுகளில் மாகாண ஆங்கில எழுத்துக்கள் அச்சிடப்படாது எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) காலை தெரிவித்தார். .
புதிய பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களின் பதிவை மாற்றுவதற்கான கட்டணங்கள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்றும் திரு.வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.