நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மணிக்கு 60 கி.மீ வேகத்தை பராமரிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
இதேவேளை தற்போது நிலவும் நிலவரப்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.