வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தமிழகம் செல்ல முற்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (02) திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இந்தியாவிற்கு அனுப்பவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.