Homeஇலங்கைவவுனியாவில் மூன்று வீடுகளில் தொடர் திருட்டு இருவர் மீது தாக்குதல்

வவுனியாவில் மூன்று வீடுகளில் தொடர் திருட்டு இருவர் மீது தாக்குதல்

Published on

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்திற்குள் நேற்று இரவு புகுந்த திருடர்கள் இன்று அதிகாலை மூன்று மணிவரையிலும் மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளிக்குளம் கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வயோதிபர் வசிக்கும் வீடு ஒன்றிற்குள் உருமறைப்புச் செய்துகொண்டு உள் நுழைந்த திருடர்கள் சிலர் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றித்தருமாறு அச்சுறுத்தி பறித்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் குறித்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு அவரின் குரலில் வீட்டில் வசித்தவர்கள் அழைத்துள்ளனர்.

கதவைத் திறந்தபோது அவ்வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அவர்கள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகளையும் பதினெட்டாயிரம் ரூபா பணம் என்பனவற்றை அங்கு திருடிக்கொண்டு சற்றுத் தொலைவிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இரு சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் வீட்டிலும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இரண்டாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது மாமடு பொலிசாருக்கு கிராம மக்களினால் அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் சம்பவ இடத்திற்குப் பொலிசார் வருகை தரவில்லை. அதிகாலை மூன்றாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று இரு சகோதரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றபோது கிராம மக்கள் 119 க்கு அழைப்பு ஏற்படுத்தி முறையிட்ட பின்னரே இன்று அதிகாலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகளிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின்போது திருடப்பட்ட தங்க நகைகளின் விபரம் சரியான மதிப்பீடு செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this