வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்ததாக வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று (13.09) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கேக் ஒன்றினை கொள்வனவு செய்தவர், கேக் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா பொது பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் முறைப்பாடு தொடர்பில் பரிசோதனைகளையும், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.