Homeஇலங்கைவவுனியாவில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு

Published on

வவுனியா – பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் கழுத்துப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்தின் அடையாளம் காணப்படுவதுடன், கட்டுத்துப்பாக்கி ஒன்றும் குறித்த இளைஞரது மோட்டார் சைக்கிளும் அருகில் காணப்படுகிறது.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது வேறு பகுதியில் யாரேனும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு குறித்த பகுதியில் சடலத்தை வைத்துவிட்டு தற்கொலை போல் திசை திருப்புவதற்கு செய்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this