வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் காற்றில் கலைந்த குளவி வீதியால் சென்றவர்கள் மீது கொட்டியதால் பாடசாலை சென்ற மாணவர் ஒருவர் உட்பட 5 பேர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈச்சம்பவம் நேற்றைய தினம் (21-02-2023) பிற்பகல் கோவில்குளம் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொது வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் பின்னர் மாலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவ்வீதியால் சென்ற 4 பேர் உட்பட பாடசாலைவிட்டு வீடு சென்ற மாணவனுமே இக் குளவிக் கொட்டிற்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.